விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை இரவில் உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே பட்டம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகாக்கனியின் மகன் பவுன்ராஜ்(16). இவர் சூலக்கரை பகுதியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவர் செவ்வாய்கிழமை பயிற்சி நிலையம் முடிந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் இரவு தனது தந்தை நடத்தும் கடைக்கு தேவையான பொருள்களை விருதுநகரில் வாங்கிக் கொண்டு, அதே ஊரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பினர்.
அப்போது, புதுப்பேருந்து நிலையம் எதிரே செல்லும் போது பின்புறமாக அடையாளம் தெரியாத மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் பவுன்ராஜ் தூக்கி வீசியெறிந்ததில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நள்ளிரவில் பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக அவரது தந்தையார் ராஜாக்கனி பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு விபத்து ஏற்படுத்தி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியவர் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்

மயிலாப்பூரில் அமித் ஷா சாலை வலம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

